தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் இஸ்லாமிய மார்க்கத்தின் மகத்தான இலட்சியமான ஓர் இறைக்கொள்கை என்னும் தவ்ஹீதை விட்டு வெகுதூரமாக பன்னெடுங்காலமாக இருந்து வந்தனர். அல்லாஹ்விற்கு இணை வைக்கின்ற மாபாதக செயலில் மூழ்கிக் கிடந்தனர். இஸ்லாத்தின் அடிப்படை எது என்று புரியாமல் இருளில் தவித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் உள்ள மக்களின் பரிதாபகரமான நிலையை உணர்ந்து, அவர்களை நரக விழும்பிலிருந்து காப்பாற்றி சுவர்க்கத்தின் பால் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவும் இஸ்லாத்தின் தூய வடிவை தெரிய வேண்டூமானால் குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற உண்மையை எடுத்துக்கூறி மக்களை தூய இஸ்லாத்தின் பால் அழைக்க வேண்டும் என்ற மகத்தான பணிக்காக உருவாக்கப்பட்டது தான் “ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்”

செயல்பாடுகள்:
வழிகேட்டிலிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு நேர்வழி காட்டி அதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தின் தூய வழியைத் தெரிந்துள்ளனர்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஐம்பதுக்கும் அதிகமான பள்ளி வாசல்களை உருவாக்கி மிகச்சிறப்பான பிரச்சார சேவையை செய்து வருகிறது.

நூற்றுக்கணக்கான ஆதரவற்ற அநாதைகளை பராமரிப்பதற்காக இரண்டு அநாதை இல்லங்களை திருச்சி மற்றும் குமரி மாவட்டம் இனயத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

ஐம்பதுக்கும் அதிகமான மத்ரஸாக்கள் சிறார்களுக்காக தமிழகத்திலுள்ள அனைத்து மர்கஸிலும் மிகச்சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.

இஸ்லாமிய மார்க்கத்தை அதன் தூய வடிவில் மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக நூற்றுக்கணக்கான பொதுக்கூட்டங்கள் மாநில, மாவட்ட மாநாடுகள், கருத்தரங்குகள், தெருமுனை பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள், இலவச வெளியீடுகள் என்று பல்வேறு வகையிலும் இஸ்லாத்தை மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறது.

அமைப்பிலுள்ள பிரச்சாரகர்களின் உழைப்பால் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான மாற்று மத அன்பர்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்துள்ள னர்.

பெண்கள் இஸ்லாமிய கல்வியை முழுமையாகப் பெற்று, தம் வாழ்கை முறையை தூய இஸ்லாத்தின் அடிப்படையில் அமைத்துக்கொள்வதோடு, தன்னைச் சார்ந்த மக்களுக்கும் இஸ்லாத்தை எடுத்துரைக்கும் மார்க்க அறிஞர்களாக உருவாக வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் தமிழக்கத்தின் பல பகுதிகளிலும் அரபி கல்லூரிகளை உருவாக்கி சிறப்பான பாடத்திட்டத்தின் மூலம் இஸ்லாமிய கல்வி கற்பிக்கப்படுகிறது.

2018 பதிப்புரிமை © www.jaqh.info. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.